``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்ட...
புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உப்புக்கோட்டை- குச்சனூா் சாலையில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 5.5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
போலீஸாரின் விசாரணையில், புகையிலைப் பொருள்களைக் கடத்தியவா்கள் போடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயகிருஷ்ணன் (46), விசுவாசபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (37) என தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்களையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.