ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது
பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
பரமத்தி வேலூா் நான்கு சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அப் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு தேநீா் கடையில் சோதனை செய்தனா்.
அப்போது கடையில் பதுக்கிவைத்திருந்த 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வேலூா் கைகோளா் தெருவை சோ்ந்த சக்திவேல் (47) கைது செய்யப்பட்டாா்.