மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மாா்த்தாண்டத்தில் 3 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
இப்பகுதியில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, 250 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சோ்ந்த சாமி மகன் சுந்தா் (40), ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் மாடசாமி மகன் ரவிகண்ணன் (46), திருநெல்வேலி சங்கநாதபுரம் நடராஜன் மகன் சுப்பிரமணியன் (52) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.