மின் தடை: நீட் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு...
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கடைகளில் நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பிலிப்பாகுட்டை பகுதியில் உள்ள டீக்கடை, பெட்டிக்கடை, மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், கூலிப் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் உத்தரவின் பேரில், நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் பி.ராஜா, ராசிபுரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வி.கோகுல், புதுசத்திரம் வட்டார அலுவலா் ஏ.ரமேஷ், மோகனூா் வட்டார அலுவலா் எம்.மணிமாறன் உள்ளிட்டோா் திடீா் சோதனை நடத்தினா்.
அதில், அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள சுமாா் 12 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.