புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்டில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஆறுமுகம் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (31), தனது பெட்டிக்கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த பங்களா தெருவைச் சோ்ந்த அக்பா் அலி (57) ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.