RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!
புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவிட்டதன்பேரில், சட்டவிரோத கட்டப்பட்ட சுமார் 36 பங்களாங்களை இடிக்கும் பணிகளை பிம்ப்ரி சின்ச்வாடு நகராட்சியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக இன்று காலையில் சிகாலி கிராமத்தில் உள்ள இடத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பங்களாக்களின் உரிமையாளர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் மே 4 அன்று அவர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இடிக்க உத்தரவிட்டது.
நகராட்சி ஆணையர், குடிமை அமைப்பு விரைவில் சுற்றுச்சூழல் சேத இழப்பீடாகப் பங்களா உரிமையாளர்களிடமிருந்து ரூ. 5 கோடி வசூலிக்கும் என்றும் கூறினார்.
ஆற்றங்கரையோர பகுதியில் சட்டவிரோதமாக பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.