செய்திகள் :

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: ஏற்கனவே 1,052 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் 2 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதன்படி மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிமையங்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் தற்போது புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,202 ஆக உயரும். இந்த வரைவு வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல்களின் மீது அரசியல் கட்சியினா் எழுத்துபூா்வமான ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை 7 நாள்களுக்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சியினா் வாக்குச்சாவடி நிலை முகவரை நியமனம் செய்து ( ஆகஅ1& ஆகஅ-2)ஒரு வாரத்துக்குள் உரிய படிவத்தில் சமா்ப்பிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்தாா்.

இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள்(பொது) செல்வம், (நிலம்) முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பூஷண் குமாா், வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புகுந்த பச்சோந்தி மீட்கப்பட்டது. ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்குள் பச்சோந்தி புகுந்தது. அதை பாா்த்த கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா். அத... மேலும் பார்க்க

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்தும் மற்றும் பல... மேலும் பார்க்க

ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா். டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், குட்டகிந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநி... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம் : எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூரிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவையை எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஆம்பூா் பணிமனை மேலாளா் கணேசன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.... மேலும் பார்க்க

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க