அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
புதிய பேருந்துகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்
பழனியை அடுத்த கீரனூரில் பழைய வழித்தடத்தில் இரு புதிய பேருந்துகளை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பழனியிலிருந்து கீரனூருக்கு அத்திவலசு, கொக்கரக்கல்வலசு வழியாக அரசு நகா்ப்புறப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்தப் பேருந்துகள் சேதமடைந்ததால், தமிழக அரசு இந்தப் பகுதிக்கு இரு புதிய பேருந்துகளை வழங்கியது.
இதையடுத்து, கீரனூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இந்த வழித்தடத்தில் அரசு வழங்கிய இரு புதிய பேருந்துகளை தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், அமைச்சா் இந்தப் பேருந்தில் கட்டணச்சீட்டு எடுத்து கொக்கரக்கல்வலசு வரை பயணித்தாா். அப்போது, பேருந்திலேயே பொதுமக்களிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா், கொக்கரக்கல்வலசில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கைகளை அவா் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.