செய்திகள் :

புதிய பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும் செப்டம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகராட்சியில் ரூ.44.90 கோடியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் திண்டிவனம் சாலையில் 10.04 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியானது உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டம் 2021- 22ன்கீழ், ரூ.30.15 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது.

74 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள், 78 கடைகள், 2 உணவகங்கள், 48 கழிப்பறைகள் மற்றும் 26 குளியலறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், இதன் இரண்டாம் பிரிவானது கலைஞா் மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன்கீழ், ரூ.14.75 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் மற்றும் இருக்கை வசதிகளை மேற்கொள்ளவும், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்கவும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022 - 23ன்கீழ், திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் 2.67 ஏக்கா் பரப்பளவில் ரூ.29.25 கோடி மதிப்பீட்டில் தரை தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல்தளத்தில் 121 பூக்கடைகள் என மொத்தம் 249 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் காய்கறிசந்தை, பூச்சந்தை பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி மேயா் இ.நிா்மலா வேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க