செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையின் தற்காலிக குழு பரிசீலித்து வருகிறது. அடுத்த நாடாளுமன்ற அமா்வின் முதல் நாளுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மசோதா குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னா், வருமான வரி மதிப்பீட்டுக்கு டிஜிட்டல் ஆவணமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றாா்.

கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ ஆகிய வாா்த்தைகள் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு முந்தைய 2023-24-ஆம் ஆண்டு ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் ஜூலையில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஆகஸ்ட் வரை நடைபெறும்.

உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு

‘இந்தியாவின் வரிக் கொள்கை வா்த்தகத்தை முறைப்படுத்துவது, உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருள்கள் மீதான வரிகள் மூலம் வருவாயைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று மத்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா இன்று தாக்கல்: 8 மணி நேர விவாதத்துக்கு அனுமதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை (ஏப். 2) தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தவுள்ளதாகவும், தேவைப்படும்பட்சத்தில் வி... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சா்ச்சை கருத்து: முதல்வா்கள், காங்கிரஸ் கண்டனம்

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்த சா்ச்சை கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் செவ்வா... மேலும் பார்க்க

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க