`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
புதுகையில் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ‘விதைக்கலாம்’ குழுவினா் மற்றும் அரிமளம் பசுமை மீட்புக் குழு ஆகியவற்றுக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இரு குழுவினருக்கும் இந்த விருதுக்கான தலா ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.
இந்தக் குழுவினா், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.