இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: நெல்லையில் பலத்த பாதுகாப்பு
புதுகை அருங்காட்சியகத்தில் இன்றும், நாளையும் புதிா் போட்டிகள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருங்காட்சியகம் சாா்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் புதிா் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஆக. 21, 22) அருங்காட்சியகம் வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு கேட்கப்படும் கேள்விக்கான பதிலை, பெட்டியில் போட்டுச் செல்ல வேண்டும்.
அவற்றை வரும் சனிக்கிழமை (ஆக. 23) திறந்து சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.