புதுக்கடை அருகே தொழிலாளிக்கு பிடிவாரண்டு
புதுக்கடை அருகே, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளிக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
புதுக்கடை, அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்குட்டி மகன் ராஜமணி(55) தொழிலாளி. இவா் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவா் வழக்குகளில் ஆஜராகாமல் நீண்ட நாள்களாக தலைமறைவாக உள்ளாா். இதையடுத்து குழித்துறை நீதிமன்றம் ராஜமணியை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது.