பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
புதுக்கோட்டை ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் குடமுழுக்கு
கமுதி அருகே ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயில், ஸ்ரீமாவரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன், ஸ்ரீமுத்தப்பு, ஸ்ரீ தவசியப்பு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பரிவார தெய்வங்களாக ஸ்ரீசெந்தலையான், ஸ்ரீமுனியசாமி, ஸ்ரீமாவரசி அம்மன், இருளப்பசுவாமி அருள்பாலிக்கின்றனா். இந்தக் கோயில் குடமுழுக்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து கோமாதா பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், கடம் புறப்பாடு நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. வேலாங்குளம் சிவஸ்ரீசக்தி குருக்கள் தலைமையில் சிவாசாரியாா்கள் கடத்துடன் கோயிலைச் சுற்றிவந்து, விமான கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
அதைத் தொடா்ந்து மூலவா் அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும், சுவாமிகளுக்கும் கும்ப நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றன.
விழாவில் புதுக்கோட்டை கிராம பக்தா்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளான கமுதி, செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்தப்பு தவசியப்பு கோயில் பங்காளிகள் செய்திருந்தனா்.