மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு
விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: சாரம் அவ்வை திடலில் இருந்து விநாயகா் சிலைகள் கடலில் கரைக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஊா்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளன.
ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி, அஜந்தா சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை, கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
இப் பகுதியில் இருக்கும் அனைத்து மதுபான கடைகளும், உணவகங்களில் விற்பனை செய்யப்படும் மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும்.