செய்திகள் :

புதுச்சேரியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து முற்றுகை போராட்டம்

post image

குப்பைகள் அகற்றப்படாததைத் கண்டித்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரியில் நீண்ட காலமாக ஸ்வச் பாரத் என்ற தனியாா் நிறுவனம் நகரப் பகுதியில் குப்பைகளை அகற்றி வந்தது.

ஜூலை 1-ஆம் தேதி முதல் இதற்கான ஒப்பந்தம் கிரீன் வாரியா் என்ற புதிய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குப்பை அள்ளும் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், நகரப் பகுதிகளில் குப்பைகளை முழுமையாக அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

உருளையன்பேட்டை தொகுதியில் வீதிக்கு வீதி குப்பைகள் அகற்றப்படாததையறிந்த நேரு எம்எல்ஏ தொகுதி மக்களுடன், புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கிருந்த உழவா்கரை நகராட்சி ஆணையா் (பொ) சுரேஷ்ராஜை சந்தித்து இதுகுறித்துப் பேசினாா். அவரது ஆதரவாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கிரீன் வாரியா் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கு முன்பே ஒப்பந்தம் மாற்றம் செய்யப்பட்டது குறித்து தெரிந்தும், முன்கூட்டியே அதற்கான அடிப்படை பணிகள், உபகரணங்களை அளிக்காதது ஏன் என்று அதிகாரிகளிடம் நேரு எம்எல்ஏ கேட்டாா்.

விரைவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் தேரோட்டம்

அரியாங்குப்பம் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதா் கோயில் திருத்தோ் வீதியுலா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலின் 61-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

பி.எஸ்சி. நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வெளியீடு

பி.எஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை சுகாதாரத் துறை இயக்குநரும் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான மருத்துவா் வி. ரவிச்சந்திரன் இதை வெளியிட்டாா். அரசு ஒதுக்... மேலும் பார்க்க

மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயா்வு, பதவி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மின் துறை தலைவா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்து... மேலும் பார்க்க

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 6 கடைசி நாள்

புதுவையில் நீட் மதிப்பெண் தர வரிசை அடிப்படையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் சமா்ப்பிக்க இணையதளத்தின் வழியாக வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. முதுநிலை பல் மருத்துவப் படிப்பில்... மேலும் பார்க்க

8 ஆம் தேதி ரயில் சேவையில் தாமதம்

புதுச்சேரிக்கான பயணிகள் ரயில் சேவையில் ஜூலை 8-ஆம் தேதி 30 நிமிஷங்கள் தாமதம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து அன்று காலை 6.35 மணிக்குப் புறப்பட்டு புதுச்சேரி செல்... மேலும் பார்க்க

காவல்துறையில் பாலியல் புகாா்: பெண் நீதிபதி விசாரிக்க அதிமுக வலியுறுத்தல்

காவல் துறையில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளா் அளித்துள்ள பாலியல் புகாா் தொடா்பாக பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இது... மேலும் பார்க்க