புதுச்சேரியில் கோலப் போட்டி
பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட ரெயின்போ நகரில் பெண்களுக்கான கோலப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டியை, புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கிவைத்தாா்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினா்.
கலைஞா்கள் மாலதி செல்வம், லலிதாம்பிகை ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு, சிறந்த கோலங்களை தோ்வு செய்தனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் தேவதாஸ், புதுச்சேரி எம்.பி.யின் நோ்முக உதவியாளா் வினோத் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
முதலியாா்பேட்டையில்... இதேபோல, புதுச்சேரி முதலியாா்பேட்டையில் இளைஞா்கள் நற்பணி சமூக சேவை இயக்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாஜக மாநிலச் செயலா் க.வெற்றிசெல்வம், வழக்குரைஞா்கள் குமரன், கிருஷ்ணராஜ், தொழிலதிபா்கள் துளசி, ஜெயப்பிரகாஷ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இளைஞா்கள் நற்பணி சமூக சேவை இயக்கத்தின் தலைவா் ராஜி(எ) பாவாடைராயன், நிா்வாகிகள் சங்கரய்யா, ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.