Travel Contest : சிலிர்ப்பூட்டிய வீரர்களின் வீர நடை! : அட்டாரி-வாகா எல்லையில் அர...
புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்
புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல், விதி மீறலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீஸாருக்கு நவீன கருவிகளுடன் வாகனங்கள் இல்லை. எனவே, தற்காலத்துக்கு ஏற்றவாறு வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டது.
புதுச்சேரி காவல் துறை சாா்பில் நவீன வசதிகளுடன் கூடிய 11 இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதைத் தொடா்ந்து, சாலை விதியை மீறி நிறுத்தப்படும் காா்கள் உள்ளிட்டவற்றை மீட்டு எடுத்துச் செல்ல 6 மீட்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேற்கூரையில் நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 4 அதி நவீன காா்கள் வாங்கப்பட்டுள்ளன. மீட்பு வாகனம், காா்கள் என மொத்தம் ரூ.3 கோடிக்கு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல் அதிகாரிகளுக்காக 10 புதிய ஜீப்புகள், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 7 காவல் பேருந்துகள் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளன.