செய்திகள் :

புதுச்சேரி: `முதல்வருக்கு தெரியாமல் ஊழல் நடப்பதற்கு வாய்ப்பில்லை’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம்,  புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், ``புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம்

இது புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் உச்சகட்டம். ஏற்கெனவே இந்தத் துறையின் தலைமைப் பொறியாளர்களாக இருந்தவர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு தலைமைப் பொறியாளரான சத்தியமூர்த்தி ஊழல், வேலைக்கு ஆட்கள் நியமனம் உள்ளிட்ட முறைகேடுகளில் சிக்கி பண மோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். தற்போது லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம், நகைகள் மற்றும் ஆவணங்களுடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அதிகாரிகள் மட்டுமல்ல, முதல்வர் மற்றும் துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். இப்படியான ஊழல்கள் அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை பணிகளில் 20% முதல் 30% சதவிகிதம் வரை கமிஷன் தொகை கைமாறியுள்ளது. இதனால், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தரமற்ற நிலையில் உள்ளன. வில்லியனூர் ஆரியப்பாளையம் மேம்பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே பழுதடைந்து கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மற்றும் குபேர் பஜார் கட்டிடங்கள் திறப்பதில் தாமதம் போன்ற பிரச்னைகள் இதற்கு சான்றாகும்.

புதுச்சேரி அரசு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த கைது நடவடிக்கைகள் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் ஒரு சிறு துளிதான். சி.பி.ஐ விசாரணை தீவிரமடையும் போது மேலும் பல ஊழல் பெருச்சாளிகள் வெளிவருவார்கள். எனவே, இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ... மேலும் பார்க்க

'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்

தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வேகமாக நடந்து வருவது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பவதாவது..."தமிழ்நாடு முழுவதும் அரச... மேலும் பார்க்க

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்... மேலும் பார்க்க

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் ப... மேலும் பார்க்க

Annamalai: 'அவரை போய் பாருங்க' அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். "பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே..." என ஒரு தரப்பு கிசுகிசுக்... மேலும் பார்க்க

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொட... மேலும் பார்க்க