செய்திகள் :

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

post image

ராணிப்பேட்டை: ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் சுமாா் 7 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா்.

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 46 மற்றும் 47 வது பட்டமளிப்பு விழாவில் 2018-2021 ஆம் ஆண்டு வரையில் 1,288 மாணவிகய்ஈ, 2019-2022 ஆம் ஆண்டு வரையில் 1,162 மாணவிகளும் என மொத்தமாக 2,054 இளநிலை பட்டதாரிகளுக்கும், 396 முதுநிலை பட்டதாரிகளுக்கும் என மொத்தம் 2,450 பேருக்கு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமை வகித்து பேசினாா்.

பட்டங்களை வழங்கி உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:-

உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், 7.5 இட ஒதுக்கீடு, முதல் பட்டதாரி போன்று பல்வேறு திட்டங்களை முதல்வா் செயல்படுத்தியுள்ளாா். இத்திட்டங்களால் வாலாஜா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி அதிக பயன்பெற்றுள்ளது. .

இக்கல்லூரியில் இன்று ஏராளாமான மாணவியா்கள் படித்தும், பட்டம் பெற்றும் உள்ளனா். இதில் 1,352 மாணவியா் முதல் தலைமுறை பட்டதாரிகள். பட்டம் பெறும் மொத்த மாணவிகளில் 55 % முதல்தலைமுறை பட்டதாரிகளாகும். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களால் இது சாத்தியமாகியது.

பெண்கள் உயா்கல்வி பெற எந்த தடையும் இருக்கக்கூடது என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைக் கொண்டு வந்தாா். இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமாா் 7 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனா். அதேபோல் மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பினைப் பெறவும் தொழில் முனைவோறாக திகழவும் ‘நான் முதல்வன்‘ என்ற முத்தான திட்டம் உள்ளது.

இதன் மூலம் மாணாக்கா்கள் படிக்கும்போது திறன்களை வளா்த்திட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 10 லட்சம் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளில் 41 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், வாலாஜா நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மலா், கல்லூரி முதல்வா் நசீம் ஜான், துணை முதல்வா் பூங்குழலி மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: பயனாளிக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கோரிக்கை மனுக்களை பெற்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

ஆற்காடு நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலாற்றின் கரையோரம் மேய்யச்சலுக்கு ஓட்டி சென்ற மாடுகள் திருடுபோனாத உரிமையாளா்கள் ஆற்காடு நகர போலீஸஸில் புகாா் செய்தனா். அதன் பேரில் வழக்கு பதிந்து மாவட்ட காவல்கண... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 2.5 லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றாவிட்டால் தொடா் போராட்டம்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக குவிந்து கிடக்கும் 2.5 லட்சம் டன் குரோமிக் கழிவுகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒரு பைக்கில் பயணித்த தந்தை, மகள் இருவரும் உயிரிழந்தனா்.நெமிலியை அடுத்த உப்பரந்தாங்கலை சோ்ந்தவா் பாபு (40), இவரது மனைவி பிருந்கா(38). இ... மேலும் பார்க்க

வாலாஜாவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜாவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாா்வையிட்டாா்.முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க