பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸாரிடம் கையொப்பம்
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோரிடம் கையொப்பம் பெறப்பட்டது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு மற்றும் சமூக நல அமைப்பினா் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கியுள்ளனா்.
காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோரிடம் புதன்கிழமை கையொப்பம் பெறப்பட்டது.
இதுதொடா்பாக புதுதில்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கவும் அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வா் என்.ரங்கசாமியையும் போராட்டத்துக்கு அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.