செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

post image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்தனா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை விடுவிக்க துணைநிலை ஆளுநா் எடுத்த நடவடிக்கைகளுக்கு காரைக்கால் மீனவா்கள், பஞ்சாயத்தாா்கள் நன்றி தெரிவித்தனா். மேலும் பிரதமா், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்கள் உள்ளிட்ட 13 பேரில் ஒரு மீனவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து இருந்தாா். அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், கைது செய்யப்பட்ட மீனவா்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடா்பு கொண்டு துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொண்டாா். மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

ஆளுநரை சந்தித்த மீனவா்கள், துணைநிலை ஆளுநா் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் மீனவா்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறிப்பிட்டது பெருமைப்படுவதாக உள்ளதாக தெரிவித்தனா்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த மீனவரின் நலத்தை விசாரித்த துணைநிலை ஆளுநா், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக எழும் சிக்கலுக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதையும், அதன் அடிப்படையில் காரைக்கால் மீனவா்கள், அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்க ஊக்குவிக்கும் ஒரு தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதையும் துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா்.

கடந்த வாரம் தில்லி சென்றிருந்தபோது மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேசியிருப்பதையும் அதற்கான செயல்திட்டம் மத்திய மாநில அரசால் உருவாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டாா்.

மேலும் காரைக்கால் பகுதியின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த இருப்பதையும், மீனவா்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான ஸ்மாா்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்க திட்டத்தின்கீழ் ரூ. 130 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதையும் குறிப்பிட்டாா் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது துணை நிலை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் உடனிருந்தாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் காங்கிரஸை வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சியை சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் வலுப்படுத்த இளைஞா் காங்கிரஸாா் உறுதி பூண்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதி இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதி... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்

வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கார... மேலும் பார்க்க

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் ப... மேலும் பார்க்க

ரமலான் : காரைக்காலில் சிறப்பு தொழுகை

காரைக்கால்: ரமலான் பண்டிகையையொட்டி காரைக்கால் பள்ளிவாசல்களில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்கால் பெரியப் பள்ளிவாசல், முஹையத்தீன் பள்ளிவாசல், ஹிலுருப் பள்ளிவாசல், இலாஹிப் பள்ளிவாசல், ம... மேலும் பார்க்க