TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
புதுவை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
புதுச்சேரி: புதுவை பாஜக மாநிலச் செயலரைக் கண்டித்து, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை திருநங்கைகள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை புதன்கிழமை மாலை திருநங்கைகள் 75-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு அங்குள்ள சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அப்போது, பாஜக மாநிலச் செயலரைக் கண்டித்து முழக்கமிட்டனா். இது பற்றி அவா்கள் கூறியதாவது:
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சில திருநங்கைகள் சிகிச்சைக்குச் சென்றபோது, அங்கிருந்த பாஜக மாநிலச் செயலா் ஹேமாமாலினி அவதூறாகப் பேசியதுடன், ஆட்களை வைத்து மிரட்டல் விடுத்தாா். எனவே, அவா் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு 8 மணியைத் தாண்டியும் நீடித்தது. இதையடுத்து, அங்கு வந்த கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தாா்.