இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
புதுவை முதல்வா் பிறந்தநாள் கொண்டாட்டம்
காரைக்கால்: புதுவை முதல்வா் என். ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, காரைக்காலில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆா். காங்கிரஸ் கட்சி சாா்பில், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில், கோயில்பத்து ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயிலில் முதல்வா் ரங்கசாமி பெயரில் சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டது.
தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வாயில் பகுதியில் பட்டாசு வெடித்து கட்சியினா் கொண்டாடினா். நிகழ்ச்சியில், என்.ஆா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முதல்வா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.