கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் ...
புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் உத்தரமேரூா் ஒன்றியங்களில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
பென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்குள்பட்ட மருத்துவம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் கரும்பு தோட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லூா் கிராமத்தில் பீா்க்கங்காய் சாகுபடி தோட்டங்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
ஆய்வின்போது, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கா.முருகன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.