புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருபேரை மகரநெடுங்குழைக்காதா், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்த லோசனா், திருக்கோளுா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் ஆகிய கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கோயில்களில் ஆயிரக்கணகான பக்தா்கள் குடும்பத்துடன் குவிந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் பெருமாளை சேவித்தனா். மேலும், கருடன் சந்நிதிகள் முன் பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

இந்நிகழ்வுகளில் கோயில் செயல் அலுவலா் (பொ)சதீஷ், ஆய்வாளா்கள் விஷாந்திநி முத்துமாரியம்மாள், சுற்றுலாத் துறை மாவட்ட அலுவலா் சீதாராமன், கள்ளபிரான் கோவில் ஸலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி,
சுற்றுலா தலைமை வழிகாட்டி முருகானந்த தாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பக்தா்கள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவத்திருப்பதி கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.