‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கல...
புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?" - முதல்வர் பதில்
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). பள்ளியில் படிக்கும்போது அவரது நிறத்தை வைத்துக் கிண்டல் செய்யும் வகையில் வேடன் என நண்பர்கள் அழைத்துள்ளனர்.
மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த ஹிரண்தாஸ் முரளி தனது பெயரை ராப்பர் வேடன் என வைத்துக்கொண்டார்.
வேடன் தனது நண்பர்களுடன் ஒரு அறையில் இருக்கும் போது போலீஸார் சோதனை நடத்தி அவரிடம் இருந்து கடந்த திங்கள்கிழமை கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்ததுடன் வேடனைக் கைதுசெய்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் புலிப்பல் டாலர் மாலை கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.
அது வேட்டையாடப்பட்ட புலியின் பல்லாக இருக்கலாம் எனக்கருதிய வனத்துறையினர் அவரைக் கைது செய்து பெரும்பாவூர் ஜுடிசியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.
அப்போது வேடன் சார்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'வேடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுவார். ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே ஜாமின் வழங்கக்கூடாது' என வனத்துறை சார்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

'அந்த டாலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ரசிகர் பரிசாக வழங்கியது. அது உண்மையான புலிப்பல் எனத் தெரிந்திருந்தால் நான் பயன்படுத்தியிருக்க மாட்டேன்.
சாதாரண மனிதருக்கு அது உண்மையான புலிப்பல் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்.
பரிசாகக் கொடுத்தவரை அடையாளம் காட்டுவதற்கு நான் போலீசுடன் ஒத்துழைப்பேன்' என்று வேடன் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட கோர்ட், 'ஒவ்வொரு வியாழக்கிழமையும் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும். கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வேடனுக்கு ஜாமின் வழங்கியது.

ராப்பர் வேடனின் கழுத்தில் கிடந்த புலிப்பல் டாலரின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய விஞ்ஞான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவில்லை.
பட்டியலின இளைஞர் என்பதால் வேடனை வேண்டும் என்றே வேட்டையாடுகிறார்கள் எனச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது.
இதை அடுத்து அரசியல் கட்சியினர் சிலர் வேடனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "போதைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறிய சமூகம், பட்டியலினச் சமூகம் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால் புலிப்பல் வைத்தது உள்ளிட்ட விஷயங்களில் நிதானமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...