செய்திகள் :

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

post image

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூர் இடையே வரும் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை(ஏப். 28) அடுத்தகட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!

பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ... மேலும் பார்க்க

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத வெப்பத்தில... மேலும் பார்க்க

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமத... மேலும் பார்க்க