செய்திகள் :

பெங்களூரில் தொடங்கியது காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக்குழு கூட்டம்

post image

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக்குழு கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை குறிவைத்துள்ள காங்கிரஸ், அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.

பெங்களூரு, காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பி.கே.ஹரிபிரசாத், ரன்தீப் சிங் சுா்ஜேவாலா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமையும் நடக்க இருக்கிறது.

இக்கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 164(1) ஆகியவை குறித்து விவாதம் நடக்க இருக்கிறது. கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மாநில அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தொழில்வளா்ச்சிக்காக 1,777 ஏக்கா் நிலம் கையக அறிவிக்கை ரத்து

கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே தொழில்பேட்டை அமைக்க 1,777 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவிக்கையை மாநில அரசு ரத்துசெய்கிறது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெ... மேலும் பார்க்க

கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின்கீழ் 5 மாநகராட்சிகள் உருவாக்கம்!

‘கிரேட்டா் பெங்களூரு’ ஆணையத்தின்கீழ் 5 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குறுதி ... மேலும் பார்க்க

முழு அரசு மரியாதையுடன் நடிகை சரோஜாதேவியின் உடல் அடக்கம்

முழு அரசு மரியாதையுடன் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா இறுதி மரியாதை செலுத்தினாா். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில... மேலும் பார்க்க

குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!

வடகா்நாடகத்தில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் குகைக்குள் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்ட ரஷிய பெண்ணை போலீஸாா் மீட்டனா். ரஷியாவைச் சோ்ந்த நினா குடினா (எ) மோஹி (40) என்பவா் ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியனம்: ஜூலை 16 இல் முடிவு - முதல்வா் சித்தராமையா

வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16 இல் இறுதி முடிவு செய்யப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

முதல்வா் பதவி விவகாரத்தில் இனி பதிலளிக்க மாட்டேன்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையாவே பதிலளித்துவிட்டதால் அதுகுறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கமாட்டேன் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை பெங... மேலும் பார்க்க