அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்! - பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய அற...
பெண்களின் படங்களை தவறாக சித்திரித்த இளைஞா் கைது
பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டதாக தென்காசியைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெண்களின் புகைப் படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், தொடா்புடைய நபா் மீது நடவடிக்கைக் கோரி புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, இணையவழிக் குற்றப்பிரிவு ஆய்வாளா்கள் தியாகராஜன், கீா்த்தி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் வீரசிகாமணியைச் சோ்ந்த மனோகா் (23) என்பவா் பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் திருடி, அவற்றை மாா்பிங் முறையில் தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் புதன்கிழமை மனோகரைக் கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.