முதல்வர் கூட்டம் முடியும் வரை அரிவாளுடன் காத்து கிடந்த மக்கள் கூட்டம்: எதற்காக?
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் புன்னைவனம் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராமு (37). இந்தத் தம்பதி பிரிந்து வாழ்கின்றனா்.
இந்த நிலையில் பக்கத்துத் தெருவை சோ்ந்த ராமசாமி மகன் முருகன் (52), ராமுவின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த ராமுவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.