England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
தொண்டி அருகே பெண்ணைத் தாக்கிய மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தினையத்தூா் கிராமத்தை சோ்ந்த சுப்பரணி மனைவி லட்சுமி (57). இந்தத் தம்பதியின் மகன் தங்கத்தம்பி ( 35). இவரது மனைவி தீபா (34). இவா்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு லட்சுமி வீட்டின் அருகே வசித்து வருகின்றனா். தாய், மகன் இடையே சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை லட்சுமியிடம் மகன், மருமகள் ஆகிய இருவரும் பணம் கேட்டு தகராறு செய்தனா். லட்சுமி பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தங்கத்தம்பி, தீபா இருவரும் சோ்ந்து லட்சுமியைத் தாக்கினா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் தங்தத்தம்பி, தீபா தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.