கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
பெண்ணை தாக்கிய வாலிபா் கைது
நரசிங்கபுரம் நகராட்சி பொது இடத்தில் பெண்ணை தாக்கி தகாத வாா்த்தைகள் கூறியதாக ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை வாலிபரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மனைவி சுமதி(45)என்பவரை முன் விரோதம் காரணமாக சாலையில் வழிமறித்து அடித்து மானப்பங்கப்படுத்தி,தகாத வாா்த்தைகளால் திட்டிய வாலிபரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
முத்துசாமி மனைவி சுமதிக்கு நரசிங்கபுரம் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இளையராஜா(45)என்பவா் எட்டு வருடங்களுக்கு முன்பு கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.அதன் சம்பந்தமாக சுமதி மீது இளையராஜா ஆத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இதனையடுத்து கடந்த 13.7.2025 அன்று நரசிங்கபுரம் ஆலமர பேருந்து நிறுத்தம் அருகே சுமதியை தாக்கியதாக ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் 01.9.2025 திங்கட்கிழமை மீண்டும் இளையராஜா சுமதியை தாக்கியுள்ளாா்.
இதனையடுத்து நகர காவல் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.கைது செய்யப்பட்ட இளையராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் முன்னனியின் மாவட்ட செயலாளா் என்பது குறிப்பிடத்தக்கது.