`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்...
பெண்ணை தாக்கிய 5 போ் மீது வழக்கு
போடி அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி பவுன்தாய் (50). இவருக்கும் இதே பகுதியைச் சோ்ந்த சின்னராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், சின்னராஜ், இவரது மனைவி பூங்கொடி, உறவினா்களான அா்ஜுனன், பாலம்மாள், ராஜாத்தி ஆகியோா் சோ்ந்து பவுன்தாயை திங்கள்கிழமை தாக்கியதோடு, அவா் மீது மனிதக் கழிவைக் கரைத்து ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பவுன்தாய் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.