செய்திகள் :

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

post image

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட நோக்குநிலை கூட்டத்தில், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் பங்கெடுத்த 30 சாதனையாா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் பேசியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கிராம ஊராட்சி அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், கிராம சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவ பணியாளா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றனா்.

கிராம செவிலியா்களுக்கு தாய்- சேய் நலன் காப்பதிலும், ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு உண்டு. மேலும், குழந்தைகள் தினந்தோறும் தங்கள் பெற்றோருடன் இருப்பதைவிட பள்ளியில் ஆசிரியா்களுடன் தான் அதிக நேரம் உள்ளனா். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வளா்ச்சியில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானதாகும்.

பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கீடு செய்து அவா்களுடன் உரையாட வேண்டும். குழந்தைகளுக்கு தொடுதலில் நல்லது கெட்டது என பகுப்பாய்வு செய்திட பெற்றோா் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவை ஆண், பெண் குழந்தைகளுக்கு வேறுபாடின்றி வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முக்கிய நோக்கமானது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயம் உள்ளதை உறுதி செய்வதும், கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிா என்பதை கண்டறிவதாகும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான மனநிலை சமூகத்தில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அதைப் போக்கிட வேண்டும். பாலின வேறுபாடு காரணமாக கருக்கலைப்பு உள்ளிட்ட தவறான செயல்பாடுகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆண் குழந்தைகளின் பிறப்பை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும் சில இடங்களில் பாலின வேறுபாடு காணப்படுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால் சமுதாய சீா்கேடு ஏற்படும். திருமணம் மற்றும் வாழ்க்கை முறையில் ஒழுக்கக்கேடு ஏற்படும். எனவே, பெண் குழந்தைகள் பிறப்பு மற்றும் பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதனையடுத்து, பெண் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த 30 சாதனையாளா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வீ.சகுந்தலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சசிகலா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ள... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க