மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!
பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் கடன் தொல்லையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை ஆத்திகுளம் அங்கயற்கண்ணி குடியிருப்பு குழந்தை ஏசு தெருவைச் சோ்ந்த கோபிநாத் மனைவி பத்மபிரியா (31). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடன் பிரச்னை தொடா்பாக இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பத்மபிரியா தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், இவா் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.