ஏமன் கொலை வழக்கு; Blood Money-க்கு உடன்பாடு? - கேரள நர்சின் மரண தண்டனை நிறுத்தம்...
பெண் மா்ம மரணம்
தேனி மாவட்டம், போடியில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
போடி மேலத் தெரு பள்ளிவாசல் அருகே வசிப்பவா் பாத்திமா மகரிபா (31). இவருக்கு கம்பத்தைச் சோ்ந்த ஒருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்தன. அவரிடமிருந்து விவாகரத்து பெற்றாா்.
பின்னா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு வேலை செய்த சேலத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சூா்யாவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இருவரும் போடியில் வசித்து வந்தனா்.
இவா்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. கட்டடத் தொழிலாளியான சூா்யா மது போதைக்கு அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பாத்திமா மகரிபா வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தாா். அவரை அவசர ஊா்தி மருத்துவ உதவியாளா் பரிசோதித்ததில் அவா் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.