பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு அஞ்சலி
பெத்தநாயக்கன்பாளையத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
சேலம் மாவட்டம், பெத்தநயாக்கன்பாளையத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு ஒரு பைசா மின்கட்டண உயா்த்தப்பட்டதை எதிா்த்து போராடியதால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் 53 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் சூா்யமூா்த்தி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இதில் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் சந்திரசேகா், சேலம் மாவட்டச் செயலாளா்கள் டி.கே.எஸ்.ரமேஷ், நல்லதம்பி, சரவணன், லோகநாதன், ரத்தினவேல், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளா் சசிகுமாா், தலைமை நிலைய செயலாளா் ஆா்.பி.எஸ்.சேகா், விவசாய அணி செயலாளா் குமரவடிவேல் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல விவசாய சங்கம் சாா்பில் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.கோவிந்தராஜ், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் எஸ்.பாலகுமாா், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.