செய்திகள் :

'என் அக்காவுக்காகதான் எல்லாமே...' - கேன்சரால் பாதிக்கப்பட்ட சகோதரி குறித்து உருகிய ஆகாஷ் தீப்!

post image

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்த பெர்பார்மென்ஸை கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய அக்காவுக்கு சமர்பிப்பதாக உருக்கமாக கூறியிருந்தார்.

ஆகாஷ் தீப் பேசியதாவது, 'நான் இதை எங்கேயுமே சொன்னதில்லை. என்னுடைய அக்கா கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அதை கண்டறிந்தோம். அவளுக்கு இப்போது பரவாயில்லை. உடல்நிலை சீராக இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக மனரீதியாக அவள் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டாள்.

ஆகாஷ் தீப்
ஆகாஷ் தீப்

இந்த வெற்றி உனக்கானதுதான் அக்கா. பந்தை கையில் எடுக்கும்போதெல்லாம் உன்னுடைய முகம்தான் எனக்கு நியாபகம் வரும். உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த பெர்பார்மென்ஸை கூட உனக்காகத்தான் சமர்பிக்கிறேன். நாங்கள் எல்லோரும் உன்னுடன் இருக்கிறோம்.' என நெகிழ்ச்சியோடு உருக்கமாக பேசியிருந்தார்

Eng v Ind : 'அந்த 2 இடத்துலதான் கோட்டை விட்டுட்டோம்!' - தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ்!

'இங்கிலாந்து தோல்வி!'இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்க... மேலும் பார்க்க

Gill : 'நான் அடிச்சு சீரிஸையே ஜெயிக்கணும்!' - வெற்றிக்குப் பின் கில் உறுதி!

'இந்தியா வெற்றி!'பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதத்தைய... மேலும் பார்க்க

Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. 28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற... மேலும் பார்க்க

'குகேஷ் பலவீனமானவர் - கார்ல்சன்; பதிலடி கொடுத்த குகேஷ்!'- கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

'குகேஷ் வெற்றி...'தமிழக வீரரும் உலக செஸ் சாம்பியனுமான குகேஷ் மீண்டும் ஒரு முறை உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் கார்ல்சனை வீழ்த்தியிருக்கிறார்.Magnus Carlsen vs Gukesh குரோஷியாவின் சாக்ரெப்பில் நடந்த... மேலும் பார்க்க

Gill : 'ஐ.பி.எல் அப்போவே டெஸ்ட் ஆட தயாராகிட்டேன்!' - இரட்டைச் சதத்தின் ரகசியம் சொல்லும் கில்!

'கில் இரட்டைச்சதம்!'இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் ம... மேலும் பார்க்க

Diogo Jota : 'திருமணமான பத்தே நாளில் கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு!- என்ன நடந்தது?

'கால்பந்து வீரர் மரணம்!'போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ யோடா கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். Diogo Jotaபோர்ச்சுக்கலை சேர்ந்த 28 வயதான டியோகா யோடா ப்ரீமியர் லீகில் லிவர்பூல் அணி... மேலும் பார்க்க