செய்திகள் :

Eng v Ind : 'அந்த 2 இடத்துலதான் கோட்டை விட்டுட்டோம்!' - தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ்!

post image

'இங்கிலாந்து தோல்வி!'

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார்.

Team India
Team India

'காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!'

பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது, ''இது ஒரு கடினமான போட்டியாகவே இருந்தது. இரண்டு இடங்களில் நாங்கள் இந்தப் போட்டியை தவறவிட்டு விட்டோம் என நினைக்கிறோம். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்கையில் 200 யை சுற்றி இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். அங்கேயே நாங்கள் மேலும் சில விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும்.

அதேமாதிரி, இந்திய அணி அவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்த பிறகு நாங்கள் முதல் இன்னிங்ஸில் 80-5 என்ற நிலையில் இருந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தோம். ஒரு கட்டத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அயர்ச்சியடைந்து விட்டோம். இந்திய அணி ஒரு க்ளாஸான அணி. நிறைய க்ளாஸான வீரர்களை கொண்டிருக்கிறார்கள்.

Stokes
Stokes

சுப்மன் கில் அசாத்தியமான பேட்டிங்கை ஆடியிருந்தார். இப்படியொரு அணிக்கு எதிராக பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு வருவது ரொம்பவே கடினம். ஜேமி ஸ்மித் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும் ஹாரி ப்ரூக்கும் ஆடி எங்களை ஆட்டத்துக்குள் கொண்டு வந்த விதத்தை ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து பார்க்க அத்தனை அற்புதமாக இருந்தது. நாங்கள் எங்களின் திட்டங்களையெல்லாம் மறுசீரமைத்துக் கொண்டு லார்ட்ஸ் போட்டிக்கு வர வேண்டும்.' என்றார்.

'என் அக்காவுக்காகதான் எல்லாமே...' - கேன்சரால் பாதிக்கப்பட்ட சகோதரி குறித்து உருகிய ஆகாஷ் தீப்!

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் தீப்.ஆகாஷ்... மேலும் பார்க்க

Gill : 'நான் அடிச்சு சீரிஸையே ஜெயிக்கணும்!' - வெற்றிக்குப் பின் கில் உறுதி!

'இந்தியா வெற்றி!'பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதத்தைய... மேலும் பார்க்க

Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. 28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற... மேலும் பார்க்க

'குகேஷ் பலவீனமானவர் - கார்ல்சன்; பதிலடி கொடுத்த குகேஷ்!'- கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!

'குகேஷ் வெற்றி...'தமிழக வீரரும் உலக செஸ் சாம்பியனுமான குகேஷ் மீண்டும் ஒரு முறை உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் கார்ல்சனை வீழ்த்தியிருக்கிறார்.Magnus Carlsen vs Gukesh குரோஷியாவின் சாக்ரெப்பில் நடந்த... மேலும் பார்க்க

Gill : 'ஐ.பி.எல் அப்போவே டெஸ்ட் ஆட தயாராகிட்டேன்!' - இரட்டைச் சதத்தின் ரகசியம் சொல்லும் கில்!

'கில் இரட்டைச்சதம்!'இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் ம... மேலும் பார்க்க

Diogo Jota : 'திருமணமான பத்தே நாளில் கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு!- என்ன நடந்தது?

'கால்பந்து வீரர் மரணம்!'போர்ச்சுக்கலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டியோகோ யோடா கார் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். Diogo Jotaபோர்ச்சுக்கலை சேர்ந்த 28 வயதான டியோகா யோடா ப்ரீமியர் லீகில் லிவர்பூல் அணி... மேலும் பார்க்க