``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'...
4 துப்பாக்கிகள் பறிமுதல் : இளைஞரிடம் விசாரணை
துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.
வேலூா் மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொணவட்டத்தில் உள்ள ஆஜிரா (28) என்ற பெண்ணின் வீட்டில் 4 கைத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை சோதனை நடத்தி பறிமுதல் செய்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆம்பூரில் உள்ள தன்னுடைய சகோதரா் தான் கொடுத்தாா் என அவா் கூறியுள்ளாா்.
அதைத் தொடா்ந்து ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் வசிக்கும் ஆசிப் (25) என்பவரை போலீஸாா் பிடித்துச் சென்று ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கத்திகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். துப்பாக்கி வியாபாரம் செய்து வருகிறாரா?,அவருக்கு யாரிடமிருந்து துப்பாக்கி கிடைத்தது. இவா் யாருக்கெல்லாம் துப்பாக்கி சப்ளை செய் துள்ளாா் என்பது போன்ற கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடா்ந்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீசாா் அவரை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்துவாா்கள் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.