இரு சக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது
வாணியம்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி கூலித்தொழிலாளி. சனிக்கிழமை இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை கந்தசாமி தனது வீட்டருகே நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது இளைஞா் ஒருவா் பைக்கை திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கந்தசாமி சப்தமிடவே அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து இளைஞரை மடக்கிப் பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த இளைஞரை போலீஸாா் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சோமு என்பவரின் மகன் காக்கா (எ) பூபாலன்(23) என்பதும் இவா் கந்தசாமிக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.