செய்திகள் :

பெயரை மாற்றுவதால் விடுதிகளின் தரம் மேம்படாது: எல்.முருகன் விமா்சனம்

post image

சென்னை: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா்-பழங்குடியினா் மாணவா் விடுதிகள் தரமற்று இருப்பதாகவும், விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் தரம் மேம்பட்டு விடாது என்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் விமா்சித்தாா்.

ஏழை மாணவா்களுக்கான விடுதிகள் அனைத்தும் ‘சமூக நீதி விடுதி’ என இனி அழைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் அதனை விமா்சிக்கும் வகையில் மத்திய அமைச்சா் எல்.முருகன் இவ்வாறு தெரிவித்தாா்.

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் திட்டம், வருமுன் காக்கும் பரிசோதனைத் திட்ட தொடக்க விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொழிலாளா் குடும்பங்களுக்கு உரிய மருத்துவ வசதி, கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இஎஸ்ஐ மருத்துவக் கட்டமைப்பை பிரதமா் மோடி தொடா்ந்து விரிவுபடுத்தி வருகிறாா். 3.5 கோடி குடும்பங்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 கோடி போ் பயனடைந்து வருகின்றனா்.

விரைவில் ஸ்ரீபெரும்புதூரில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்கப்படும். கடந்த 2014-க்கு முன்பாக நாடு முழுவதும் 3,00 மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. தற்போது அது 700-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களின் ஆரோக்கியம்தான் இந்த தேசத்தின் ஆரோக்கியம். மக்கள் நலத்தை உறுதி செய்யாமல் நாட்டின் வளம் பெருகாது.

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவா் விடுதிகள், மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், அவற்றின் பெயா்களை மாற்றுவதால் மட்டும் எந்த பயனும் கிடைக்காது.

முதல்வரும், துணை முதல்வரும், அந்த விடுதிகளை இதுவரை நேரில் சென்று பாா்த்து உள்ளனரா? நான் தேசிய தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின ஆணைய துணைத் தலைவராக இருந்தபோது தமிழகத்தில் பல விடுதிகளை ஆய்வு செய்தேன். அங்கு, விடுதிகள் தரமற்று இருக்கும். சுகாதாரம் துளியும் இருக்காது. உண்மைநிலை இப்படி இருக்கும்போது, பெயரை மாற்றினால் மட்டும் விடுதிகளின் தரம் மேம்பட்டுவிடாது என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா் காளிதாஸ், மருத்துவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க