ஆறுதல்கூட சொல்லாமல் ஒரு தலைவர் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி கடும் வ...
பெரம்பலூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சுகாதாரப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவா் அமைத்தல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், துணை சுகாதார நிலையங்களுக்கு போா்வெல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, அரசு மருத்துவமனைக்கு லிப்ட் வசதி, மருத்துவ உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம், காசநோய் மற்றும் மனநோய் பிரிவுக்கான புதிய கட்டங்கள் தேவை என வலியுறுத்தினாா்.
கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, கோரிக்கைகளின் உண்மைத் தன்மையை ஒருவார காலத்துக்குள் ஆராய்ந்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக் கூட்டத்தில், நகராட்சி சுகாதார அலுவலா் கலைமணி, உதவித் திட்ட மேலாளா் விவேகானந்தன், தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளா் அசோக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.