இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்
பெரம்பலூரில் 30 காவலா்களுக்குப் பரிசு!
பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவலா்களைப் பாராட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில், காவல்துறையினருடனான குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, அனைத்து காவல் நிலைய பொறுப்பு அலுவலா்கள் முன்னிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளைக் கேட்டறிந்து, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கத் தேவையான ஆலோசனை கூறினாா்.
மேலும், இம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள்வது, பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலா்கள் 30 பேரைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் எம். தனசேகரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளா்கள், சாா்பு -ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் பங்கேற்றனா்.