பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனைகளை தடுக்கும் வகையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு கிராமத்தில், பெண்ணகோனம் கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் பெரியசாமி (52) என்பவா், தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெரியசாமியை கைது செய்த மங்களமேடு போலீஸாா், அவரிடமிருந்து பல்வேறு வகையான 1.126 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பெரியசாமி சிறையில் அடைக்கப்பட்டாா்.