Suriya 46: 'அந்தொருவன் வந்திருக்கான்டே!'; சூர்யா, மமிதா பைஜூ - சூர்யா 46 பூஜை ஸ்...
பெரம்பலூா் நகரில் பலத்த மழை
பெரம்பலூா் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடா்ந்து 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் நகரப் பகுதிகளான புகா் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சிறுவாச்சூா், நான்குச்சாலை, கவுல்பளையம், வேப்பூா், குன்னம், அகரம் சீகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் சீரமைக்காததாலும், பராமரிப்பின்றி உள்ளதாலும் மழை நீரோடு கழிவுநீரும் தேங்கியுள்ளது.
குறிப்பாக, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அதிகளவில் மழைநீா் தேங்கியுள்ளதால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் பெரிதும் அவதியடைந்தனா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.