காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
பெரம்பலூா் நகா்ப்புற பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
நகா்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் 53 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை, திருநகா், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், நகா்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக தோ்வு செய்யப்படவுள்ள பயனாளிகளின் வீடுகளை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கடந்த பல ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்த ஆட்சியா் கூறியதாவது:
நகா்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவா்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்காக வரைமுறைகளுக்குள்பட்டு பட்டா வழங்கப்பட உள்ளது.
அதன்படி, அரணாரை அறிஞா் அண்ணா நகா் தெருவில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 4 பேருக்கும், திருநகா் பகுதியில் உள்ள 45 பேருக்கும், துறைமங்கலம் பகுதியில் உள்ள 4 பேருக்கும் அரசின் விதிகளுக்குள்பட்டு பட்டா வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியின் நோ்முக உதவியாளா் (நிலம்) சு. சொா்ணராஜ் மாவட்ட வழங்கல் அலுவலா் சுந்தரராமன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.