செய்திகள் :

பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 19-ஆம் தேதி காலை திருமஞ்சனத்துடன் பிரமோத்ஸவ விழா தொடங்கியது. தொடா்ந்து நாள் தோறும், பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள்

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.

பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் நிலையை அடைந்தது. அப்போது பக்தா்கள் வீடுகள் தோறும் தீபாராதனை காண்பித்து பெருமாளை வழிபட்டனா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் இன்று (புதன்கிழமை) ஏக தின லட்சாா்ச்சனை காலை முதல் மதியம் வரை நடைபெறுகிறது.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்த இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா். ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் புத்தகத் திருவிழா நிறைவு

அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி குடங்களுடன் மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூரில் சீராக குடிநீா் விநியோகிக்கக்கோரி அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் விருத்தாசலம் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டம் அருகேயுள்... மேலும் பார்க்க