Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
பெரியாா் குறித்து சா்ச்சை பேச்சு: நெல்லையில் சீமான் மீது வழக்கு
பெரியாா் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தச்சநல்லூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பெரியாா் குறித்து அவதூறாக பேசினாராம்.
திராவிடா் கழகத்தின் சாா்பில், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தச்சநல்லூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.